27 அடி மலைப் பாம்புடன் போராடிய 6 பேர்! -(VIDEO)

பாரிட் மிலிந்தாங், டிசம்.6 – இந்தோனேசியாவில் சுமார் 27 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை பிடிப்பதற்கு 6 பேர் போராடிய திடுக்கிடும் வீடியோ தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தோனேசியாவின் ‘பாடாங் பரியமான்’ மாநிலத்தில் மீனவர் ஒருவர் தன் நண்பர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்த போது அங்கு தண்ணீர் செல்லும் ஒரு சிறிய ஓடைப் பகுதியில் ஏதோ ஒன்று பெரியதாக நகர்வதைக் கண்டுள்ளார்.

** நன்றி- youtube- viral news………..

தண்ணீரில் பெரிய மீன் ஏதாவது அடித்து வந்திருக்கும் , மீனாக இருக்கலாம் என்று சென்று பார்த்த போது, அங்கு ராட்சத மலைப் பாம்பைக் கண்டு அதிர்ந்து போனார்.

அதன் பின் தன் நண்பர்களுடன் அந்த பாம்பை பிடிக்க முயற்சி செய்தார். ஏனெனில் இந்தப் பாம்பை அப்படியே விட்டால் மனிதர்கள் யாரையும் விழுங்கி விடும் என்பதால், இந்த முயற்சியில் அவர்கள் இறங்கியுள்ளனர்.

ஆனால், சுமார் 27 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை அவ்வளவு எளிதா என்ன? பிடிக்க முயன்ற ஆறு பேரில் ஒருவரின் கணுக்காலை பாம்பு இறுக்கமாக முறுக்கிப் பிடித்தது.

இதனால் மற்றவர்கள் முதலில் அந்த பாம்பின் தலையை இறுகப் பிடித்து கடும் அழுத்தத்தைத் தந்தனர். இந்த அழுத்தம் தாங்காமல் மலைப் பாம்பு பிடியை தளர்த்தவே அதனிடமிருந்து அவர் தப்பித்தார்.

பாம்பை பிடித்த அவர்கள் ஒரு பெரிய கூண்டின் உள்ளே போட்டு அடைத்தனர். வனத்துறை அதிகாரிகளுக்கு தெரிவித்த பின்னர், அவர்கள் அந்த பாம்பை பல கிலோமீட்டர் தூரம் கொண்டு சென்று காட்டுப் பகுதிக்குள் விடுவித்தனர். பாம்பை பிடிப்பதற்கு 6 பேர் பாம்புடன் போராடிய காணொளி தற்போது சமூக வலைத் தளங்களில் பரவலாகி வருகிறது.

The post 27 அடி மலைப் பாம்புடன் போராடிய 6 பேர்! -(VIDEO) appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *