3 மாதத்துக்குள் ‘கோச்சடையான்’ படத்துக்காக வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் – லதா ரஜினிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

நடிகர் ரஜி­னி­காந்தை வைத்து அவ­ரது மகள் சௌந்­தர்யா இயக்­கிய ‘கோச்­ச­டையான்’ படத்­துக்­காக லதா ரஜி­னிகாந்த் வாங்­கிய கடனை 3 மாதத்­துக்குள் திருப்பிக் கொடுக்க உயர் நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

சௌந்­தர்யா ‘கோச்­ச­டையான்’ என்ற 3 டி அனி­மேஷன் படம் 2014ஆம் ஆண்டு வெளி­யா­னது. பெரி­ய­தொரு பொருட்­செ­லவில் தயா­ரான இந்தப் படத்­துக்கு ரஜினி படத்­துக்கு அளிக்கும் வர­வேற்பை ரசி­கர்கள் வழங்­கா­த­மையால் படம் தோல்­வி­ய­டைந்­தது.

இதனால் தயாரிப்பாளர் க­ளுக்கு நஷ்டம் ஏற்­பட்­டது.

கோச்­ச­டையான் படத்தை விநி­யோகம் செய்­ததில் லதா ரஜி­னிகாந்த் வாங்­கிய 10 கோடி இந்திய ரூபா பணத்தைத் திரும்ப தராமல் மோசடி செய்­த­தாக 2015ஆம் ஆண்டு சென்னை காவல் ஆணையர் அலு­வ­ல­கத்தில் ஆட் பீரோ தனியார் நிறு­வன நிர்­வாகி அபிர்சந்த் நாகர் குற்றச்சாட்டை முன்­வைத்தார்.

ஆனால், லதா ரஜி­னிகாந்த் மீதான குற்­றச்­சாட்­டுக்கு மறுப்புத் தெரி­வித்த படத்தயா­ரிப்­பா­ள­ரான ‘மீடியா ஒன் குளோபல்’ நிறு­வனம் விளக்­க­ம­ளித்­தி­ருந்­தது. அதில், பட பரி­வர்த்­த­னை­களில் லதா ரஜி­னிகாந்த் ஒரு­போதும் தலை­யி­ட­வில்லை என கூறி­யி­ருந்­தது.

‘கோச்­ச­டையான்’ படத்தின் தயா­ரிப்புப் பணி­க­ளுக்­காகக் கொடுக்­கப்­பட்ட தொகையை ரஜி­னிகாந்த் தலை­யிட்டு பெற்றுத் தர வேண்டும் என குறித்த நிறு­வ­னத்­தினர் வேண்­டுகோள் விடுத்­தி­ருந்­தனர்.

இது தொடர்­பாக அபிர்சந்த் நாகர், மது­பாலா ஆகியோர் 2015ஆம் ஆண்டு செய்­தி­யா­ளர்­க­ளுக்கு வழங்­கிய செவ்­வியில், ‘கோச்­ச­டையான்’ திரைப்­படம் கடந்த 2014 ஆண்டு மே மாதம் வெளி­யா­னது.

இப்­ப­டத்தின் தயா­ரிப்புப் பணி­க­ளுக்­காக மீடியா ஒன் நிறு­வனம் எங்­க­ளிடம் 10 கோடி இந்திய ரூபாவைக் கட­னாகப் பெற்­றது.

மீடியா ஒன் நிறு­வ­னத்­துக்­காக கடன் ஒப்­பந்­தத்தில் லதா ரஜி­னிகாந்த் கையெ­ழுத்­திட்­ட­தோடு, படம் வெளி­யா­னதும் பணத்தைத் திருப்பிக் கொடுத்­து­வி­டு­வ­தாக உறு­தி­யு­ம­ளித்­தி­ருந்தார். அதற்­கான ஆதாரம் எங்­க­ளிடம் உள்­ளது.

இந்தப் பிரச்­சினை குறித்து அவர் பதில் கூற மறுக்­கிறார்.

கடந்த சில மாதங்­க­ளுக்கு முன்பே இந்தப் பிரச்­சி­னையை ரஜி­னிகாந்த் கவ­னத்­துக்கு கொண்­டு­ செல்ல நினைத்தோம். இந்தப் பிரச்சினையில் ரஜி­னிகாந்த் தலை­யிட்டு பணத்தைப் பெற்றுத் தர­வேண்டும்” என அப்­போது தெரி­வித்­தி­ருந்­தனர்.

இந்த வழக்கில் உயர் நீதி­மன்றத் தீர்ப்­பை­ய­டுத்து, ஆட் பீரோ சார்பில் உயர் நீதி­மன்­றத்தில் மேன்­மு­றை­யீடு செய்­யப்­பட்ட இந்த வழக்கு நேற்று முன்தினம் விசா­ர­ணைக்கு வந்­தது. விசா­ர­ணை­யின்­போது உயர் நீதி­மன்ற நீதி­பதி லதா ரஜி­னி­யிடம் சில கேள்­வி­களை முன்வைத்தார்.

வாங்­கிய பணத்தை ஏன் திருப்பித் தர­வில்லை? எப்­போது கொடுப்­பீர்கள் என இன்றே நேற்று முன்தினம் பதி­ல­ளிக்க வேண்டும். பணத்தைத் திருப்பித் தரா­விட்டால் குற்­ற­வியல் நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­படும் என உத்­த­ர­விட்டு வழக்கைத் தள்ளி வைத்தார்.

அன்று மாலை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது 12 வாரங்களில் பணத்தைத் திருப் பித் தந்து விடுவதாகத் தெரிவிக்கப் பட்டது. அதை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம் எதிர்வரும் 3 மாதத்துக்குள் பணத்தைத் திருப் பித்தர உத்தரவிட்டுள்ளமை குறிப் பிடத்தக்கது.

Go to Source

செய்தி மூலப்பிரதி – சினிமா செய்திகள் – LankaSee