40 விழுக்காடு மலேசியர்கள் மனநல நோயால் பாதிக்கப்படுவர்!– துணைப் பிரதமர்

புத்ராஜெயா, அக்.11- குறைந்தபட்சம் 40 விழுக்காடு மலேசியர்கள், தங்களின் வாழ்நாளில், மனநோயால் பாதிக்கப்படுவர் என்று ஆய்வு ஒன்றின் வாயிலாக தெரிய வந்துள்ளதாக துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில் கூறினார்.

கடந்த 2017-ஆம் ஆண்டு, சுகாதார அமைச்சு, 273,203 மலேசியர்களிடம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. ஆய்வில் கலந்துக் கொண்டவர்களில், 18,336 பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப் பட்டுள்ளனர் என்று தெரிய வந்துள்ளதாக அவர் சொன்னார்.

“அந்த எண்ணிக்கையில், 11,811 பேர் இலேசான மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். 3,680 பேர் நடுத்தர வகை மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். 1,682 பேர் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர்” என்று அவர் தெரிவித்துக் கொண்டார்.

மன அழுத்தத்தால் பாதிக்கப் பட்டவர்களை, மலேசியர்கள் ஒதுக்குவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று துணைப் பிரதமர் அறிவுறுத்தினார்.

சில மதங்கள், மனநல நோயால் பாதிக்கப் படுபவர், மன வலிமை குறைந்தவர் என்று கூறி வருகின்றன என்பதை சுட்டிக் காட்டி, உடல் உபாதைகள் போன்றே, மன உபாதைகளை நாம் கருத வேண்டும் என்று வான் அஸிஸா நினைவுறுத்தினார்.
“இந்த மனப் பக்குவத்தை நாம் எவ்வளவு சீக்கிரம் அடைகிறோமோ, அது அனைவருக்கும் நன்று” என்று அவர் சொன்னார்.

இளைஞர்கள் மத்தியில் மனநல நோய்கள் அதிகப் படியாக தென்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதனை ஆரம்பக் கட்ட அறிகுறியாக கருத்தில் கொண்டு, அனைத்து தரப்பினரும் செயல் பட வேண்டும் என்று அவர் கூறினார்.

இந்தப் பிரச்சனையை களையும் பொருட்டு, அரசாங்கம் மன நல நோய்க்கான சிகிச்சை வசதிகள் மற்றும் முறையான சிகிச்சை முறையை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

The post 40 விழுக்காடு மலேசியர்கள் மனநல நோயால் பாதிக்கப்படுவர்!– துணைப் பிரதமர் appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *