41 வயது ஆடவனை திருமணம் செய்த அந்த 11 வயது சிறுமி எங்கே?

குவா மூசாங்,ஆகஸ்ட்.10- தனது தந்தையின் வயதுக்கு ஈடான ஆடவனை திருமணம் செய்து கொண்ட 11 வயது சிறுமி இப்போது எங்கிருக்கிறாள் தெரியுமா? சுற்று வட்டார மக்களின் வெறுப்புக்கும் கிண்டல் பேச்சுக்கும் ஆளான அந்த சிறுமி தற்போது குவா மூசாங்கிலுள்ள ஒரு ரப்பர் தோட்டத்தின் உட்புறப்பகுதிக்கு மாறிச் சென்று விட்டாள்.

தாங்கள் திருமணம் செய்து கொண்ட செய்தி நாடும் முழுவதும் பரவி பெரும் சர்ச்சைக்குள்ளானதை அடுத்து, தனது மனைவியை கிராம மக்கள் கேலி செய்து வந்ததாகவும், அவளை படம் பிடித்து வாட்ஸெப்பில் பகிர்ந்து வந்ததாகவும் அச்சிறுமியின் கணவன் கூறினான். அதனால் கடந்த வாரம், தனது மனைவியையும் அவளது குடும்பத்தாரையும் ரப்பர் தோட்டத்திலுள்ள வீட்டில் குடி வைத்துள்ளதாக அவன் மேலும் குறிப்பிட்டுள்ளான்.

தனது கிராமத்திலிருந்து மிக தொலைவில் உள்ள அந்த ரப்பர் தோட்டத்திற்கு அன்றாடம் சென்று மனைவியின் குடும்பத்தாருக்கு உணவு கொடுத்து வருவது சிரமமாகத்தான் இருக்கிறது; ஆனால், தனது மனைவியின் பாதுகாப்பை தான் மிகவும் முக்கியமானதாக கருதுவதாக அவன் கூறியுள்ளான்.

இதனிடையே, குடிசைப் பள்ளியில் பயில மறுத்து வரும் தனது மனைவியை எப்படியாவது சமாதானப்படுத்தி படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணமும் அவனுக்கு இருக்கிறதாம்.

கடந்த ஜூன் மாதம் 18-ஆம் தேதி, 11 வயது சிறூமியும், 41 வயது ஆடவனும் தாய்லாந்தில் திருமணம் செய்து கொண்டது பேஸ்புக்கில் வைரலாகியது. அதையடுத்து இரு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கிய அந்த ஆடவனுக்கு 1800 ரிங்கிட் அபராதம் விதித்தது. மேலும், கடந்த ஜூலை மாதம், நராதிவாட் இஸ்லாமிய சமய மன்றத்தின் சம்பந்தப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *