48 எம்.பி. பிரைமரி கேமராவுடன் ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் அறிமுகம்

சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி 48 எம்.பி. பிரைமரி கேமரா கொண்ட ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. #RedmiNote7 #smartphone

சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 48 எம்.பி. கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன் ரெட்மி பை சியோமி என்ற புதிய பிராண்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் வாட்டர் டிராப் நாட்ச், ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு பை மற்றும் MIUI 10 இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. 

புதிய ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாக 48 எம்.பி. பிரைமரி கேமரா, 1/2″ சாம்சங் ISOCELL பிரைட் GM1 சென்சார் f/1.8, 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா ஏ.ஐ. அம்சங்கள் மற்றும் 13 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. கிளாஸ் பேக் மற்றும் கிரேடியன்ட் வடிவமைப்பு கொண்டிருக்கும் ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

ரெட்மி நோட் 7 சிறப்பம்சங்கள்

– 6.3 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வலைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5

– ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 660 14 என்.எம். பிராசஸர்

– அட்ரினோ 512 GPU

– 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி

– 4 ஜி.பி. / 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி

– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

– ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் MIUI 10

– ஹைப்ரிட் டூயல் சிம்

– 48 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8, PDAF, EIS

– 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா

– 13 எம்.பி. செல்ஃபி கேமரா

– கைரேகை சென்சார், ஐ.ஆர். சென்சார்

– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி

– 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

– க்விக் சார்ஜ் 4

ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் பிளாக், புளு மற்றும் பர்ப்பிள் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் விலை 999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.10,390), 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை 1199 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.12,460), 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை 1399 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.14,540) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Related Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *