ஜேர்மன் நாட்டில் விமானிகள் நடத்திய வேலை நிறுத்த போராட்டத்தால் .1500 கோடி வருமான இழப்பு

ஜேர்மன் நாட்டில் விமானிகள் நடத்திய வேலை நிறுத்த போராட்டத்தால் தனியார் விமான நிறுவனத்திற்கு சுமார் ரூ.1500 கோடி வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜேர்மனி நாட்டின் முன்னணி விமான நிறுவனமான லூப்தான்சா தான் இந்த வருமான இழப்பை சந்தித்துள்ளது.

விமான நிறுவனம் அதிகளவில் லாபம் ஈட்டி வந்த நிலையிலும் இந்நிறுவனத்தை சேர்ந்த விமானிகளுக்கு கடந்த 5 ஆண்டுகளாக ஊதிய உயர்வு அளிக்கவில்லை.

இதனால் கடந்த 2014ம் ஆண்டு முதல் விமானிகள் 15 முறை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

கடந்த நவம்பர் மாதம் விமானிகள் தொடர்ந்து 6 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்துள்ளனர்.

இதனால் லூப்தான்சா நிறுவனம் 4,500 விமானங்களை ரத்து செய்தது. விமான சேவைகள் பாதிக்கப்பட்டதால் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பாதிப்படைந்தனர்.

இந்நிலையில், தொடர்ந்து 6 நாட்கள் நடைபெற்ற இந்த போராட்டத்தின் விளைவாக லூப்தான்சா நிறுவனம் எதிர்பார்த்த வருமானத்தில் சுமார் 100 மில்லியன் யூரோ(1574,23,80,000 இலங்கை ரூபாய்) இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் விமானிகளுக்கு 4.4 சதவிகிதம் ஊதிய உயர்வு அளிக்க நிறுவனம் முன் வந்துள்ளது.

எனினும், இதற்கு விமானிகள் ஒப்புதல் அளிக்கவில்லை என்றும் வெகு விரைவில் மீண்டும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் ஜெர்மனி

உங்கள் கருத்தைப் பதிவு செய்க

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் *

*

முக்கிய குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தமிழர்நெட் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@tamilarnet.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.