ஜேர்மன் நாட்டில் தீவிரவாதியால் கொல்லப்பட்ட லொறி ஓட்டுனருக்கு ரூ.82 லட்சம் நிதியுதவி

ஜேர்மன் நாட்டில் லொறி ஓட்டுனர் ஒருவர் தீவிரவாதியால் கொல்லப்பட்டதை தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்காக ரூ.82 லட்சம் வரை நிதி திரட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜேர்மன் தலைநகரான பெர்லினில் கடந்த திங்கள் கிழமை அன்று தீவிரவாதி ஒருவன் நிகழ்த்திய தாக்குதல் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிறிஸ்துமஸ் மார்க்கெட் பகுதிக்குள் தீவிரவாதி லொறி மூலம் நடத்திய தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 50க்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்தனர்.

இத்தாக்குதலை நடத்துவதற்கு முன்னதாக Anis Amri(24) என்ற பெயருடைய தீவிரவாதி லொறி ஓட்டுனரை கொடூரமாக கொன்றுவிட்டு லொறியை கடத்தியுள்ளான்.

மேலும், அப்போது தீவிரவாதியை தடுக்க Lukasz Urban (37) என்ற பெயருடைய அந்த லொறி ஓட்டுனர் அவனை எதிர்த்து போராடியதாக கூறப்படுகிறது.

எனினும், தீவிரவாதியால் கொல்லப்பட்ட ஓட்டுனருக்கு பொதுமக்கள் தற்போது ஓன்லைன் மூலம் நிதியுதவி திரட்டி வருகின்றனர்.

ஓன்லைன் கோரிக்கை தொடங்கப்பட்ட ஒரே நாளில் 45,000 பவுண்ட்(82,74,666 இலங்கை ரூபாய்) சேர்ந்துள்ளதாகவும், இவற்றை லொறி ஓட்டுனரின் குடும்பத்திற்கு வழங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜேர்மனியில் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிய தீவிரவாதி நேற்று இத்தாலி நாட்டில் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜெர்மனி

உங்கள் கருத்தைப் பதிவு செய்க

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் *

*

முக்கிய குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தமிழர்நெட் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@tamilarnet.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.