பெர்லின் லொறி ஓட்டுநரின் பிரேத பரிசோதனை அறிக்கை

பெர்லின் தாக்குதலில் சிக்கி உயிரிழந்த போலந்து லொறி ஓட்டுநரின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி அதிர வைத்துள்ளது.

துனிசியா நாட்டை சேர்ந்த ஐ.எஸ் தொடர்புடைய Anis Amri என்ற தீவிரவாதி, பெர்லின் கிறிஸ்துமஸ் மார்க்கெட்டில் லொறியை மோதி தாக்குதலில் ஈடுபட்டார். தாக்குதலின் போது அந்த லொறியின் ஓட்டுநர் Lukasz Urban பயணி இருக்கையில் அமர்ந்திருந்தார். தாக்குதலில் அவரும் கொல்லப்பட்டார்.

இந்நிலையில் Lukasz Urbanனின் பிரேத பரிசோதனை அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. அதில், அவர் தாக்குதல் நடப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பே தலையில் சுடப்பட்டது தெரியவந்துள்ளது.

எனினும், Anis Amri மார்க்கெட்டில் லொறியை மோதி தாக்குதல் நடத்திய நேரத்தின் போது அவர் உயிருடன் இருந்தது தெரியவந்துள்ளது.

மக்கள் பலர் Lukasz Urbanனால் தான் பெரிய உயிரிழப்பு தவிர்க்கப்பட்டதாகவும், அவர் ஒரு ஹீரோ. அவரின் தியாகத்திற்கு புகழாரம் சூட்ட வேண்டும என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Lukasz Urbanக்கு நாட்டின் மிக உயரிய குடிமகனுக்கு அளிக்கும் விருதை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து சுமார் 38,000 பேர் மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.

மேலும் ஜெர்மனி

உங்கள் கருத்தைப் பதிவு செய்க

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் *

*

முக்கிய குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தமிழர்நெட் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@tamilarnet.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.