ஜேர்மனியில் சிறுவனை அடித்துக் கொன்ற கும்பல்

ஜேர்மனி நாட்டில் புகலிடம் கோரி வந்த சிறுவனை கும்பல் ஒன்று கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிரியா நாட்டை சேர்ந்த 15 வயதான சிறுவன் ஜேர்மனியில் புகலிடம் கோரி Bremen நகரில் தங்கி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று மர்மக் கும்பல் ஒன்று சிறுவனை கொடூரமாக தாக்கியுள்ளது. இத்தாக்குதலில் ரத்த வெள்ளத்தில் துடித்த அச்சிறுவன் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சிறுவன் கோமா நிலைக்கு சென்றுள்ளார்.
மேலும், சிகிச்சை பலனளிக்காத காரணத்தினால் சனிக்கிழமை அன்று சிறுவனின் உயிர் பிரிந்துள்ளது.

இச்சம்பம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தியதில், சிறுவன் மீது மற்ற அகதிகள் தான் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

எனினும், இது தொடர்பாக பொலிசார் உறுதியான தகவல்களை வெளியிடவில்லை.

மேலும், சிறுவன் மர்ம கும்பலால் கொல்லப்பட்டுள்ளது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், தாக்குதல் நடத்தியவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என பொலிசார் உறுதியளித்துள்ளனர்.

ஜேர்மனி நாட்டில் அகதிகளை கட்டுப்பாடின்றி அனுமதிக்கும் சான்சலருக்கு இதுபோன்ற தாக்குதல்களால் நெருக்கடி அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் ஜெர்மனி

Comments are closed.