ஜெர்மன் விமான விபத்து தொடர்பில் பரபரப்பு தகவல்கள்

ஜேர்மன் நாட்டை சேர்ந்த விமானம் விபத்துக்குள்ளாகி 144 பேர் பலியானது தொடரபான இறுதி விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜேர்மன் நாட்டை சேர்ந்த ஜேர்மன்விங்ஸ் என்ற விமானம் கடந்த 2015-ம் ஆண்டு மலை மீது மோதி விபத்துக்குள்ளானதில் 144 பேர் பரிதாபமாக பலியானார்கள்.

விமானத்தின் துணை விமானியான ஆண்ட்ரியஸ் லூபிட்ஸ் என்பவர் திட்டமிட்டு மலை மீது மோதி விப்பத்தை ஏற்படுத்தியதாக புகார்கள் வெளியாகி உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், விமான விபத்து தொடர்பாக கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்த விசாரணை தற்போது முடிவு பெற்றுள்ளது.
இது தொடர்பாக விசாரணை அதிகாரியான Christoph Kumpa என்பவர் ஒரு விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘விமான விபத்திற்கு 100 சதவிகித காரணம் துணை விமானி தான்’ என அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும், விமான விபத்து நிகழ்வதற்கு 5 வருடங்களுக்கு முன்னர் முதல் துணை விமானி மன உளைச்சல், உளவியல் ரீதியான பிரச்சனைகளுக்கு 41 மருத்துவர்களிடம் சிகிச்சை அல்லது ஆலோசனை பெற்றுள்ளார்.

இதுமட்டுமில்லாமல், சிகிச்சையின்போது துணை விமானிக்கு தற்கொலை எண்ணம் இருந்துள்ளது.

ஆனால், இதனை வெளிப்படுத்தினால் தனது பணி பறிப்போகும் என்பதால் அதனை மறைத்துள்ளார்.

துணை விமானி எதிர்கொண்டு வந்த மன உளைச்சல் தொடர்பான பிரச்சனைகள் ஜேர்மன்விங்ஸ் விமான அதிகாரிகளுக்கு தெரியவரவில்லை.

எனவே, ஜேர்மன்விங்ஸ் விமான விபத்திற்கு துணை விமானி மட்டுமே காரணம் என்றும் இதில் வேறு ஒருவருக்கும் தொடர்பு இல்லை என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஜெர்மனி

உங்கள் கருத்தைப் பதிவு செய்க

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் *

*

முக்கிய குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தமிழர்நெட் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@tamilarnet.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.