ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரித்தானியானியாவின் வெளியேற்றத்தால் ஜேர்மனுக்கு அடித்த யோகம்

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரித்தானியா வெளியேறி முடிவெடுத்த நாளில் இருந்து பல்வேறு மாற்றங்கள் ஏற்பட தொடங்கிவிட்டது.

அதன் ஒரு பகுதியாக லண்டன் நகரில் உள்ள அமெரிக்காவின் Goldman Sachs வங்கியின் ஊழியர்கள் 1000 பேர் ஜேர்மனியின் மிகப்பெரிய நகரான Frankfurt கிளை வங்கிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

முக்கிய மேலாதிகாரிகளும் இந்த 1000 பேரில் அடக்கமாகும்.

இந்த வங்கி ஊழியர்கள் முக்கியமாக Frankfurt நகரின் வங்கிக்கு மாற்றப்பட காரணம் அங்கு தான் ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைமை அலுவலகம் உள்ளது.

மேலும் லண்டனிலிருந்து ஊழியர்கள் நியூயார்க், பிரான்ஸ், ஸ்பெயின், போலாந்து போன்ற நகருக்கும் மாற்றப்பட்டு வருகிறார்கள்.

இதனிடையில் பிரித்தானியாவின் பிரதமர் தெரேசா மே தனது நாடு ஐரோப்பிய பொது சந்தையை விட்டு விலகும் என அறிவித்துள்ளதால், HSBC வங்கியும் தனது லண்டன் ஊழியர்கள் 1000 பேரை பாரிஸ் நகரருக்கு மாற்றியுள்ளது.

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரித்தானியா விலகியுள்ளது இந்த வங்கிகள் விடயங்களில் ஜேர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு பல நன்மைகள் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும் ஜெர்மனி

உங்கள் கருத்தைப் பதிவு செய்க

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் *

*

முக்கிய குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தமிழர்நெட் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@tamilarnet.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.