ஐரோப்பிய கண்டத்திற்கு வழங்கப்படும் உணவு மற்றும் தண்ணீரில் விஷம்

ஐரோப்பிய கண்டத்திற்கு வழங்கப்படும் தண்ணீர் வழங்குதலில் அதிக ஆபத்து உள்ளது எனவும் இதில் ஐஎஸ் தீவிரவாதிகள் இரசாயன கலவைகளை பயன்படுத்த வாய்ப்பு உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஜேர்மனியின் தலைநகரான பெர்லியினில் கடந்த டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் சந்தையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 12 பேர் பலியாகினார், 56 பேர் காயமுற்றனர்.

இத்தாக்குதலை மையமாகக் கொண்டு ஐஎஸ் தீவிரவாதிகள் இரசாயன ஆயுதங்களை கொண்டு ஜேர்மனியில் தாக்குதல் நடத்துவதற்கு வாய்ப்பிருப்பதாகவும் அதற்காக ஆய்வுப்படைகள், உளவுத்துறைகள் மற்றும் அவசர சேவைகள் போன்றவை உடனடி நடவடிக்கை எடுப்பதற்கு தயாராக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் ஜேர்மனியில் ஒரு உறுதியான நன்கு பயிற்சி பெற்ற தீவிரவாத குழு ஜேர்மனி மீது இரசாயன ஆயுத தாக்குதலுக்கு தாயாரக இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் அவர்கள் தண்ணீர் மாசுபடுத்துதல், நாட்டில் அதிக அளவு தண்ணீர் செல்லும் டேங்குகுகளில் இரசாயனங்களை கலக்குதல் மற்றும் கெமிக்கல் கட்டிடங்களுக்கு செல்லும் தண்ணீர் தொட்டிகள் என பலவற்றை குறி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு ஏற்றாற் போல் ஜேர்மனில் உள்ள படை வீரர்கள் முன்படை சற்று கவனமுடன் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் ஐஎஸ் தீவிரவாதிகள் ww1 ரகம் கொண்ட இராசயன தாக்குதல்களுக்கு தயராகிவருவதாகவும், அதை ஜேர்மனியின் உணவு மற்றும் தண்ணீரில் கலந்துவிடுவதற்கு வாய்ப்பு உள்ளது என்ற அச்சம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று கடந்த ஜனவரி மாதம் பிரித்தானிய அமைச்சர் Ben Wallace ஐஸ் தீவிரவாதிகள் பிரித்தானியாவை தாக்குதவதற்கு இரசாயன ஆயுதங்களை அவர்கள் பயன்படுத்த உள்ளதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜெர்மனி

உங்கள் கருத்தைப் பதிவு செய்க

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் *

*

முக்கிய குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தமிழர்நெட் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@tamilarnet.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.