ஜேர்மனியில் விஷ வாயு தாக்கி பலியான மாணவர்கள்

ஜேர்மனியில் இரவு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இளவயது மாணவர்கள் விஷ வாயு தாக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜேர்மனியின் Bavaria மாகாணத்தின் Arnstein நகரில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

தோட்டத்தில் உள்ள ஒரு சிறிய இடத்தில் 18ல் இருந்து 19 வயது நிரம்பிய 6 பேர் இரவு பார்ட்டியில் ஈடுபட்டனர். இதில் ஒரு இளம்பெண்ணும் அடங்கும்.

இந்நிலையில் இவர்கள் யாரும் மறுநாள் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த தோட்டத்தின் உரிமையாளர் சென்று பார்த்த போது இவர்கள் அனைவரும் பிணமாக கிடந்துள்ளனர்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் பொலிசாருக்கு தகவல் கொடுத்தார்.

விரைந்து வந்த பொலிசார் சடலங்களை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் விஷவாயு தாக்கி இறந்திருக்கலாம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

உணவு தயாரிக்கும் போது carbon monoxide வாயு அவர்களை தாக்கி இருக்கலாம், இதனால் அவர்கள் அனைவரும் இறந்திருக்கலாம் என்று தெரிவித்தனர்.

அதேசமயம் மர்மநபர்களால் இவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்த அவர்கள், ஆனால் அதற்கான எந்த ஒரு தடயமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் இது தொடர்பாக அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் ஜெர்மனி

உங்கள் கருத்தைப் பதிவு செய்க

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் *

*

முக்கிய குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தமிழர்நெட் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@tamilarnet.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.