8 வயது சிறுவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

Please log in or register to like posts.
News
ஆசிரியர் – Editor

மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிகண்டி வசந்தநகர் பகுதியில் 8 வயது சிறுவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டடுள்ளான்.

இந்த சம்பவம் இன்று (12) இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

வீடு அமைந்துள்ள காணியில் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றிலிருந்தே குறித்த சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட சடலம் கிளிநாச்சி வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகளிற்காக வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

உயிரிழந்த சிறுவன் அதே பகுதியை சேர்ந்த சதீஸ்குமார் கனிஸ்டன் என்ற 8 வயது சிறுவன் என தெரியவந்துள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *