ஜேர்மனியின்  Hamburg Airport-ல்  நச்சுப்புகை பரவியதால் பயணிகள் அவதி

ஜேர்மனியின் Hamburg Airport-ல் நேற்று திடீரென நச்சுப்புகை பரவியது, இதனால் பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

பல மணிநேரம் ஆகியும் புகை பரவிக்கொண்டே இருந்ததால் 50க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

புறப்பட தயாராக இருந்த விமானங்கள் தாமதாகின, கண் எரிச்சல் அடைந்ததால் பயணிகள் அனைவரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தீவிர விசாரணைக்கு ஜேர்மனியில் தனி நபர் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படும் மிளகு ஸ்பிரேயை வேண்டுமென்றே யாரோ பரப்பிவிட்டது தெரியவந்தது.

உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு படையினர் நிலைமையை சரிசெய்த பின்னர் விமான நிலையம் மீண்டும் செயல்பட தொடங்கியது.

ஜேர்மனியின் ஐந்தாவது பெரிய விமான நிலையமான Hamburg Airport-ல் ஒரு மாதத்துக்கு ஒரு மில்லியன் பயணிகள் வந்து செல்வது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜெர்மனி

உங்கள் கருத்தைப் பதிவு செய்க

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் *

*

முக்கிய குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தமிழர்நெட் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@tamilarnet.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.