டிரம்பை சந்திக்க மோடி அமெரிக்கா பயணம்

அமெரிக்காவின் புதிய அதிபராக பதவி ஏற்றுள்ள டொனால்டு டிரம்ப் இந்தியாவுடன் நல்லுறவை மேம்படுத்திக்கொள்ள விரும்புகிறார். தேர்தல் பிரசாரத்தின் போதே அவர் அமெரிக்க இந்தியர்கள் மத்தியில் பேசும்போது, இந்தியாவோடு உறவை மேம்படுத்துவேன் என்று கூறினார்.

அதேபோல் அவர் பதவி ஏற்றதும் இதற்கான முயற்சிகளில் இறங்கி இருக்கிறார். டொனால்டு டிரம்ப் அதிபராக தேர்வு பெற்றதும் பிரதமர் மோடி அவருக்கு டெலிபோனில் வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் அதிபராக பதவி ஏற்றதை தொடர்ந்து டொனால்டு டிரம்ப் பிரதமர் மோடியை டெலிபோனில் தொடர்பு கொண்டு நீண்ட நேரம் பேசினார். அப்போது ராணுவம், பாதுகாப்பு, பொருளாதாரம், வர்த்தகம் போன்றவை தொடர்பாக இந்தியாவுடன் இணைந்து செயல்படுவது பற்றி விரிவாக அவர் பேசினார்.

இதைத்தொடர்ந்து அமெரிக்க ராணுவ மந்திரி ஜேம்ஸ் பாத்தீஸ், இந்திய ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கரை தொடர்பு கொண்டு ராணுவம், பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு வி‌ஷயங்களை பேசினார். அதேபோல் அமெரிக்க வெளியுறவு மந்திரி ரெக்ஸ் தில்லர்சன், இந்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜை தொடர்பு கொண்டு பேசினார்.

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது அவர் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் மைக் பிளைனை சந்தித்து பேசினார்.

இதைத்தொடர்ந்து 19 பேர் கொண்ட அமெரிக்க எம்.பி.க்கள் குழு ஒன்று டெல்லி வருகிறது. அவர்கள் டெல்லி, ஐதராபாத், பெங்களூர் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று பல்வேறு வி‌ஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்துகின்றனர்.

சமீபத்தில் டொனால்டு டிரம்ப் வெளிநாட்டினருக்கு விடுத்த கட்டுப்பாடுகள் தொடர்பாக இந்தியர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எச்-1 பி விசா கெடுபிடியால் இந்திய தகவல் தொடர்பு நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உள்ளது. இதுபற்றி அமெரிக்காவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதுபோன்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்து பேச திட்டமிட்டு இருக்கிறார். ஜெர்மனியில் வருகிற ஜூலை மாதம் ஜி.20 நாடுகள் மாநாடு நடைபெறுகிறது. இதில், பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

இந்த மாநாட்டில் டொனால்டு டிரம்பும் கலந்து கொள்வார். அப்போது இருவரும் சந்தித்து பேசுவதாக திட்ட மிடப்பட்டு இருந்தது.

ஆனால், பல்வேறு பிரச்சினைகள் இருப்பதால் முன்கூட்டியே டொனால்டு டிரம்பை சந்திக்க மோடி முடிவு செய்தார். அதேபோல் டொனால்டு டிரம்பும் மோடியை சந்திக்க விரும்புகிறார். இதனால் முன்கூட்டியே இந்த சந்திப்பு நடைபெற இருதரப்பினரும் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

மே மாதம் முதல் வாரத்தில் இந்த சந்திப்பு நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பிரதமர் மோடி மே மாதம் அமெரிக்கா செல்ல இருக்கிறார். இதற்கான ஏற்பாடுகளும், இது தொடர்பான மற்ற பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன.

மேலும் இந்தியா

உங்கள் கருத்தைப் பதிவு செய்க

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் *

*

முக்கிய குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தமிழர்நெட் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@tamilarnet.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.