இலங்கையின் படகு ஒன்று தமிழகத்தில் கரையொதுங்கியது

கைவிடப்பட்ட நிலையில் இருந்த இலங்கையின் படகு ஒன்றை தமிழக கரையோரப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

தனுஸ்கோடிக்கு அப்பால் 6 கடல்மைல் தூரத்தில் இந்த படகு கைப்பற்றப்பட்டுள்ளது.

கண்ணாடி இழையிலான இந்தப்படகு நேற்று மாலை குறித்த இடத்தில் இருப்பதாக மீனவர்கள் வழங்கிய தகவலை அடுத்தே அது கைப்பற்றப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

18 அடி நீளம் மற்றும் 6 அகலம் கொண்ட இந்த படகில் ஓஎப்ஆர்பி- ஏ 4044-என்பிஓ என்ற பதிவு இலக்கம் பொறிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதில் இருந்து மீன்பிடி வலைகள், 10 லீற்றர் மண்ணெண்ணெய் என்பன கைப்பற்றப்பட்டன.

குறித்த படகு விபத்தில் சிக்கியிருக்கலாம் என்ற சந்தேகம் தற்போது எழுப்பப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த படகு ஏதாவது கடத்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டிருக்கலாமா? என்ற கோணத்திலும் விசாரணைகள் இடம்பெறுகின்றன.

மேலும் இலங்கை

உங்கள் கருத்தைப் பதிவு செய்க

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் *

*

முக்கிய குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தமிழர்நெட் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@tamilarnet.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.