சந்திரிக்காவின் செயலமர்வை இரத்து செய்த மைத்திரி

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட அரசியல் செயலமர்வு, சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இரத்து செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் குழுவுக்காக இந்த வாரம் இறுதியில் அரசியல் செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த செயலமர்விற்கு உறுப்பினர்கள் சிலர் எதிர்ப்பு வெளியிட்டமையினால் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் பொருளாதார நெருக்கடி மற்றும் சர்வதேச பொருளாதார நிலைமைகள் தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர், அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜயம்பதி விக்ரமரத்ன ஆகியோர் இந்த செயலமர்வில் கருத்து வெளியிட இருந்தனர்.

பிரதமருடன் வெளிநாட்டு விஜயத்திற்கு இணைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களை தவிர ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஏனைய அனைத்து உறுப்பினர்களும் இந்த செயலமர்விற்கு இணக்கம் வெளியிட்டுள்ளனர்.

எப்படியிருப்பினும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினரான ஜயம்பதி விக்ரமரத்னவின் ஆலோசனையை பெற்றுக் கொள்வது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களை அவமானப்படுத்தும் வகையில் உள்ளதென அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஜனாதிபதிக்கு, அறிவித்துள்ளார்.

இதனையடுத்து பொருளாதாரம் தொடர்பில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு அறிவிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு ஜனாதிபதியிடம் இதுவரையில் பதில் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இலங்கை

உங்கள் கருத்தைப் பதிவு செய்க

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் *

*

முக்கிய குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தமிழர்நெட் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@tamilarnet.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.