பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக மெரினாவில் மாணவர்கள் போராட திட்டம்

அதிமுகவில் இரண்டு அணியாக பிரிந்து செயல்பட்டு கொண்டிருக்கின்றன. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியாகவும் மற்றொரு அணியாக சசிகலா தலைமையில் செயல்பட்டு கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், முதல்வராக இருந்த பன்னீர்செல்வத்தை மிரட்டி ராஜினாமா கடிதத்தை வாங்கியதாக அவர் செய்தியாளர்களிடம் புகார் தெரிவித்திருந்தார்.

இதனிடையே சசிகலா தரப்பில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக தற்போது பதவியேற்றுள்ளார். இவருக்கு தமிழக மக்களிடம் போதுமான வரவேற்பு இல்லை.

இதனால் சமூக வலைதளங்களில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக பல்வேறு கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

மேலும், ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள் மெரினாவில் திரண்டு போராடியது போல் தற்போது மீண்டும் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக மாணவர்கள் திரள வாய்ப்புள்ளது என்று போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில், மாணவர்கள் ஒன்றுகூடி விடுவார்களோ என்ற அச்சத்தில் மயிலாப்பூர் துணை கமிஷனர் தலைமையில் மெரினாவில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் தமிழ்நாடு

உங்கள் கருத்தைப் பதிவு செய்க

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் *

*

முக்கிய குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தமிழர்நெட் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@tamilarnet.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.