பக்கத்து கைதியால் சிறையில் பதறிய சசிகலா

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் அடைக்கக்கப்பட்டுள்ள அறைக்கு பக்கத்தில் சயனைடு மல்லிகா என்ற படுபயங்கர கொலைகாரி அடைக்கப்பட்டுள்ளார்.

இவர் கோவிலுக்கு வரும் பெண் பக்தர்களுக்கு பிரசாதத்தில் சயனைடு கலந்து கொடுத்து கொலை செய்துள்ளார். இது போல ஏராளமான பக்தர்களை அவர் கொலை செய்து கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியவர்.

இவரது அறைக்கு பக்கத்திலேயே சயனைடு மல்லிகா இருப்பதால் அதிர்ச்சி  அடைந்த சசிகலா தனக்கு வேறு அறை கேட்டுள்ளார். இதனை அடுத்து  அதிகாரிகள் வேறு பாதுகாப்பான  அறைக்கு சசிகலா மற்றும் இளவரசியை மாற்றியதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்பு ஜெயலலிதா பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தபோது இதே சயனைடு மல்லிகா அவரை பார்க்க விரும்பினார். ஆனால் பாதுகாப்பு காரணம் கருதி அதிகாரிகள் மறுத்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தமிழ்நாடு

உங்கள் கருத்தைப் பதிவு செய்க

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் *

*

முக்கிய குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தமிழர்நெட் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@tamilarnet.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.