ஸ்மித்-மார்ஷ் சதத்தால் ஆஸ்திரேலியா 327 ரன்கள் குவிப்பு

நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா அணி இந்தியா வந்துள்ளது. முதல் டெஸ்ட் வருகிற 23-ந்தேதி புனேயில் நடக்கிறது. இதற்கு முன்பாக ஆஸ்திரேலியா இந்தியா ‘ஏ’ அணிக்கெதிராக மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டது.

அந்த பயிற்சி ஆட்டம் மும்பை பிராபோர்ன் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா ‘ஏ’ அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பீல்டிங் தேர்வு செய்தார். ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான வகையில் அமைக்கப்பட்டிருந்தது.

ஆஸ்திரேலிய அணியின் வார்னர், ரென்ஷா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இங்கினார்கள். வார்னர் 25 ரன்னிலும், ரென்ஷா 11 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். ஆனால் அதன்பின் வந்த ஸ்மித் (107), ஷேன் மார்ஷ் (104) சிறப்பாக விளையாடி சதம் அடித்தனர். சதம் அடித்த இருவரும் ரிட்டையர்டு ஹர்ட் மூலம் வெளியேறினர்.

அடுத்து வந்த ஹேண்ட்ஸ்காம்ப் 45 ரன்கள் அடித்தார். இந்த மூவரின் சிறப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்டத்தில் 90 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்கள் குவித்துள்ளது. மிட்செல் மார்ஷ் 16 ரன்னுடனும், விக்கெட் கீப்பர் வடே 78 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா ஏ அணியின் நவ்தீப் சைனி 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் *

*

முக்கிய குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தமிழர்நெட் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@tamilarnet.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.