பரபரப்பான ஆட்டத்தில் கடைசி பந்தில் இலங்கை வெற்றி

ஆஸ்திரேலியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் இன்று மெல்போர்னில் நடைபெற்றது.

டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங் செய்தது. அதன்படி ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. கேப்டன ஆரோன் பிஞ்ச் 43 ரன்னும், கிளிங்கர் 38 ரன்னும், ட்ரேவிஸ் ஹெட் 31 ரன்னும் சேர்க்க, அந்த அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் சேர்த்தது. நீண்ட நாட்களுக்குப் பின் களம் இறங்கிய மலிங்கா 4 ஓவரில் 29 ரன்கள் விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

பின்னர் 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களம் இறங்கியது. அந்த அணி 15 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி 30 பந்தில் 42 ரன்கள் தேவைப்பட்டது.

16-வது ஓவரில் இலங்கை அணி 13 ரன்கள் சேர்த்தது. இதனால் 24 பந்தில் 29 ரன்கள் தேவைப்பட்டது. 17-வது ஓவரில் இலங்கை அணி 11 ரன்கள் எடுத்தது. இதனால் கடைசி 18 பந்தில் 18 ரன் தேவைப்பட்டது.

18-வது ஓவர் டர்னர் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் குணரத்னே அவுட் ஆனார். அவரை 37 பந்தில் 7 பவுண்டரியுடன் 52 ரன்கள் சேர்த்தார். 3-வது பந்தில் ஸ்ரீவர்தனா 15 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். ஆனால் 5-வது பந்தை பிரசன்னா பவுண்டரிக்கு விரட்டினார்.

இதனால் இரண்டு விக்கெட்டுக்களை இழந்தாலும் 6 ரன்கள் சேர்த்தது. ஆகவே கடைசி இரண்டு ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்டது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் *

*

முக்கிய குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு தமிழர்நெட் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@tamilarnet.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.