சுவிட்சர்லாந்து நாட்டில் தண்டவாளம் மீது நின்ற வாலிபர் மீது ரயில் மோதியதில் அவர் உடல் சிதைந்து பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸின் லூசேர்ன் மாகாணத்தில் உள்ள Sursee என்ற நகரில் தான் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நேற்று அதிகாலை 6 மணியளவில் ரயில் நிலையத்திற்கு அதிவேகத்தில் ரயில் ஒன்று வந்துள்ளது.

அப்போது தண்டவாளம் மீது 22 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நின்றிருந்ததாக கூறப்படுகிறது.

எதிர்பாராத இத்தருணத்தில் வாலிபர் மீது ரயில் மோதி சென்றுள்ளது. இவ்விபத்தில் வாலிபர் உடல் சிதைந்து சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

இச்சம்பவத்தில் மூன்றாவது நபருக்கு தொடர்பு இல்லை என்பதால் இது தற்கொலையாக இருக்கலாம் என பொலிசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.

குடும்பத்தகராறு அல்லது காதல் தோல்வி காரணமாகவும் இத்தற்கொலை நிகழ்ந்திருக்க வாய்ப்புள்ளது.

மேலும், சம்பவம் நிகழ்ந்தபோது இரண்டு வாலிபர்கள் இதனை நேரில் பார்த்ததால் அவர்களை பொலிசார் தேடி வருகின்றனர்.

கருத்துக்கள்

avatar
wpDiscuz