இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு கடத்தி செல்லப்பட்ட 16 கிலோ தங்கத்தை ராமநாதபுரம் அருகே வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

இன்று ராமேஸ்வரம் அருகே உள்ள குந்துக்கால் கடற்கரை பகுதிக்கு, தங்கம் கடத்தி வரப்படுவதாக வருவான் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அங்கு விரைந்த அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதனையடுத்து அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக இருந்த இருவரை விசாரணை நடத்தி போது 16 கிலோ தங்கத்துடன் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து கருத்து வெளியிட்ட அதிகாரிகள், இலங்கையில் இருந்து இந்த தங்கம் கடத்தி வரப்பட்டிருப்பதாகவும், அவற்றை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினம் அருகே ரூ.6 கோடி மதிப்பிலான 16.32 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த தங்கம், ரகசியமாக படகில் கடத்தி வரப்பட்டது என தெரியவந்துள்ளது.

கருத்துக்கள்

avatar
wpDiscuz