மாமியார் உங்களை வெறுக்கிறார் என்பதற்கான அறிகுறிகள் இதோ

மாமியார் மருமகள் உறவு சண்டை சச்சரவு இல்லாமல் அமைந்துவிட்டால் குடும்பத்தில் பல பிரச்சனைகள் இருக்காது. ஆனால் இந்த டிவி சீரியல்களில் வருவதை போல பல வீடுகளில் மாமியார் மருமகள் சண்டை தலைவிரித்து ஆட தான் செய்கிறது.

திருமணம் ஆவதற்கு முன்னரே மாமியார் மருமகள் உறவு என்றால் சண்டையாக தான் இருக்கும் என பலர் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இதுவே பெரும்பாலும் சண்டைக்கு காரணமாக அமைந்துவிடுகிறது.

இங்கு உங்களது மாமியாருக்கு உங்களை பிடிக்கவில்லை என்பதை எப்படி எல்லாம் தெரிந்து கொள்ளலாம் என்பதற்கான காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

தடைகள் விதிப்பது உங்களது அனைத்து ஆசைகளுக்கும் தடை விதிப்பதை உங்களால் உணர முடியும். அவரது தடைகள் ஒருவேளை கலாச்சரம், ஒரு சில சூழ்நிலைகள் அல்லது குடும்ப மரியாதை சார்ந்து இருந்தால் அவர் செய்வது சரி தான். நீங்கள் அதிகமாக யோசித்து மனதை குழப்பிக்கொள்ள வேண்டாம்.

முன்னால் காதலியுடன் பேசுவது உங்கள் கணவரின் முன்னால் காதலியுடன் அவர் தொடர்பில் இருந்தால் அவருக்கு உங்களை பிடிக்கவில்லை என்று அர்த்தம் ஆகும்.
தாழ்த்தி பேசுதல் உங்கள் மாமியார் உங்களது கனவுகள், தோற்றம் போன்றவற்றை பற்றி எப்போதும் தாழ்த்தி குறை சொல்லிக்கொண்டே இருந்தால் அவருக்கு உங்களை பிடிக்கவில்லை என்று எடுத்துக்கொள்ளலாம்.

செவி சாய்க்காமல் இருப்பது உங்களின் தேவைகள் அல்லது நீங்கள் சொல்ல விரும்பும் கருத்துக்களுக்கு செவி சாய்க்காமல் இருப்பது போன்றவை உங்களை அவருக்கு பிடிக்கவில்லை என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகளாகும்.
வெளியிடங்கள் உங்களை வெளியிடங்களுக்கு அழைத்து செல்லாமல் இருப்பது, முக்கிய திருவிழாக்கள், பண்டிகைகள் போன்றவற்றிற்கு அழைத்து செல்லாமல் இருப்பது ஆகியவை பிடிக்கவில்லை என்பதற்கான அறிகுறிகளாகும்.


கருத்துக்கள்

avatar
wpDiscuz