LG நிறுவனத்தின் புதிய படைப்பு இம் மாதம் அறிமுகம்

சிறந்த தொழில்நுட்பத்தினைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைத்து அறிமுகம் செய்யும் LG நிறுவனம் மற்றுமொரு புதிய கைப்பேசியினை இம் மாதம் அறிமுகம் செய்யவுள்ளது.

இந்நிலையில் LG Q6 எனும் குறித்த கைப்பேசியின் சிறப்பம்சங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி 5.5 அங்குல அளவு, 2160 x 1080 Pixel Resolution உடைய Full HD தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

அத்துடன் Qualcomm® Snapdragon™ 435 Mobile Platform Processor, பிரதான நினைவகமாக 4GB RAM, 64GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் கொண்டுள்ளது.

தவிர 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா, 3,000 mAh உடைய மின்கலம் என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

எனினும் இக் கைப்பேசி அறிமுகமாகும் திகதி மற்றும் விலை தொடர்பான தகவல்கள் வெளியிடப்படவில்லை.


கருத்துக்கள்

avatar
wpDiscuz