எதிர்வரும் நாட்களில் கோத்தபாயவை கைது செய்ய நடடிக்கை

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச எதிர்வரும் நாட்களில் கைது செய்யப்படவுள்ளதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டீ.ஏ.ராஜபக்ச கல்லறையை நிர்மாணிப்பதற்காக பணம் ஒதுக்கியமை தொடர்பிலான விசாரணைக்கமைய இந்த கைது இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நடவடிக்கையில் பிரபல அமைச்சர்கள் இருவர் நேரடியாக தலையிட்டுள்ளனர். சட்டமா அதிபர் திணைக்களமும் அனுமதி வழங்கியுள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை நேற்று முன்தினம் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள், உறுப்பினர்கள் சந்திப்பில் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோத்தபாய ராஜபக்சவை கைது செய்தால் பாரிய அரசியல் கொந்தளிப்புகளுக்கு முகம் கொடுக்க நேரிடும் என இதன்போது டிலான் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.

ராஜபக்சர்களுக்கு இன்னமும் பாரிய மக்கள் பலம் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.+


கருத்துக்கள்

avatar
wpDiscuz