சுதுமலைக்கு வந்த நடிகை ரம்பா

தமிழ் திரையுலகின் பிரபல்ய நடிகை ரம்பா நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தார்.

இலங்கை தமிழரான இந்திரன் என்பவரையே நடிகை ரம்பா 2010ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்திரன் யாழ்ப்பாணம் சுதுமலைப் பிரதேசத்தை பிறப்பிடமாக கொண்ட நிலையில் நேற்றைய தினம் நடிகை ரம்பா தனது கணவன் வீட்டிற்கு வருகை தந்தார்.

திருமணத்துக்கு பின்னர் இருவரும் கனடாவில் வாழ்ந்து வந்துடன் இவர்களுக்கு லாவண்யா, ஷாசா ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

1993ம் ஆண்டு திரைக்கு அறிமுகமாகி பல ரசிகர்களின் கனவுக்கன்னியான ரம்பா ரஜினி, அஜித், விஜய் உட்பட பல பிரபல்ய நடிகர்களுடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிட த்தக்கது.


கருத்துக்கள்

avatar
wpDiscuz