நாடாளுமன்ற உறுப்பினரின் மகன் மர்மமான முறையில் மரணம்

முன்னாள் ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினரின் மகன் மரம்மான முறையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

மாத்தறை, மடிஹ பிரதேச ஹோட்டல் அறையில் இருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இன்று காலை குறித்த ஹோட்டல் அறையில் அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக மாத்தறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாத்தறை பபுரண பிரதேசத்தை சேர்ந்த யசசிரு திஸர குமார கலப்பதி என்ற 24 வயதுடைய வர்த்தகரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவர் ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக ஜஸ்டின் கலப்பதியின் மகனும் தென் மாகாண சபை உறுத்தினர் சத்துர கலப்பதியின் கடைசி சகோதரராகும்.

உயிரிழந்த யசசிரு நேற்று இரவு முதல் அந்த ஹோட்டலில் தங்கியிருந்ததாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது


கருத்துக்கள்

avatar
wpDiscuz