உலகில் அதிக சோம்பேறி நாடுகளின் பட்டியலில் இடம்பெற்ற இந்தியா

அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் உலகில் அதிக சோம்பேறிகளை கொண்ட நாடுகள் குறித்த ஆய்வை மேற்கொண்டது. 46 நாடுகளைச் சேர்ந்த சுமார் 7 லட்சம் பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் முடிவு சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் சீனா கடைசி இடத்தில் உள்ளது. குறிப்பாக ஹாங்காங் நாட்டினர் அதிகளவு நடக்கின்றனர். ஒரு நாளைக்கு 6,880 அடிகள் அவர்கள் நடக்கின்றனர். இந்தப் பட்டியலில் இந்தியா 39வது இடத்தில் உள்ளது. இந்தியர்கள் சராசரியாக ஒருநாளைக்கு 4297 அடிகள் நடக்கின்றனர். அதிலும், இந்திய பெண்கள் இந்திய ஆண்களை விட குறைவாகவே நடப்பதாகத் தரவுகள் கூறுகின்றன. இந்திய ஆண்கள் ஒரு நாளைக்கு 4,606 அடிகளும் பெண்கள் ஒரு நாளைக்கு 3,684 அடிகளுமே நடக்கின்றனர்.

இந்தச் சோம்பேறிகள் பட்டியலில் இந்தோனேசியா முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டவர்கள் ஒருநாளைக்கு 3,513 அடிகள் மட்டுமே நடக்கின்றனர். இது தொடர்பாக டெல்லியைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணரான ரித்திகா சமடர் கூறுகையில். ஆரோக்கியமாக இருப்பதற்குத் தினமும் குறைந்தது 10 ஆயிரம் அடிகள் நடக்கவேண்டும். காலையில் மட்டும் நடைப்பயிற்சி செய்தால் போதும் என்று மக்கள் எண்ணுகின்றனர். ஆனால் நாள் முழுவதும் புத்துணர்ச்சியோடு இருப்பது அவசியம் என்று கூறுகிறார்.


கருத்துக்கள்

avatar
wpDiscuz