பிரான்ஸில் ட்ரம்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிரான்ஸிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

இன்று (வெள்ளிக்கிழமை) நடத்தப்பட்ட குறித்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோங், ட்ரம்பிற்கு அமோக வரவேற்பளித்த போதும், ட்ரம்பின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே பொதுமக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், ட்ரம்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமைந்த பதாதைகளை கைகளில் ஏந்தியும் பிரான்ஸ் தேசியக் கொடியை ஏந்தியும்  ஆர்ப்பரித்துள்ளனர்.

இன்று கொண்டாடப்படும் பிரான்ஸ் தேசிய தின நிகழ்வுகளில் ட்ரம்ப் பங்குபற்றியுள்ள நிலையில், மேற்படி ஆர்ப்பாட்டமும் ஒரு புறத்தே முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாதுகாப்பு இரட்டிப்பாக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


கருத்துக்கள்

avatar
wpDiscuz