லண்டனில் அமிலத் தாக்குதல்கள்

வடகிழக்கு லண்டனில் நடத்தப்பட்ட அமில தாக்குதல்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹக்னி, ஸ்டோக் நிவிங்டன் மற்றும் இஸ்லிங்டன் ஆகிய பகுதிகளில் நேற்று (வியாழக்கிழமை) இரவு 10.25 மணியளவில் ஐந்து அமிலத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

குறித்த தாக்குதல்கள் தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட அறிக்கையில், ஹக்னி பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் மீது அமிலத்தை வீசி தாக்குதல் நடத்தியதாகவும் பின்னர் அந்த மோட்டார் சைக்கிளை திருடியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று மேலும் நான்கு தாக்குதல்கள் வடகிழக்கு லண்டனில் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்படி ஐந்து தாக்குதல்களுக்கும் தொடர்பிருக்கலாம் என புலன்விசாரணையாளர்கள் சந்தேகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல்களால் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் இதுவரை எதுவித தகவல்களும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், இது குறித்த விசாரணைகள் மும்முரம் பெற்றுள்ளதாக அண்மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.


கருத்துக்கள்

avatar
wpDiscuz