சாதனைப் படைத்த ஜேம்ஸ் ஆண்டர்சன்

நாட்டிங்காம் டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இங்கிலாந்து – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்க அணி கேப்டன் டு பிளிசிஸ் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி அந்த அணியின் டீன் எல்கர், ஹெய்னோ குன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

அணியின் ஸ்கோர் 18 ஆக இருக்கும்போது டீன் எல்கர் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில் டவ்சனிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இந்த விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ஆண்டர்சன் சொந்த மண்ணில் 300 விக்கெட்டுக்கள் வீழ்த்திய முதல் இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றார். மேலும், சர்வதேச அளவில் 4-வது வீரர் என்ற சாதனையும் படைத்தார்.

இதற்கு முன் முத்தையா முரளீதரன் சொந்த மண்ணில் 493 விக்கெட்டுக்களும், அனில் கும்ப்ளே 350 விக்கெட்டுக்களும், ஷேன் வார்னே 319 விக்கெட்டுக்களும் வீழ்த்தியுள்ளனர்.

34 வயதாகும் ஜேம்ஸ் ஆண்டர்சன், இந்த போட்டியுடன் 123 போட்டிகளில் 471 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.


கருத்துக்கள்

avatar
wpDiscuz