மோடியின் புகைப்படத்தை நாயுடன் இணைத்து வைத்த குழுவினர் வழக்குப்பதிவு

டுவிட்டரில் கணக்கு வைத்துள்ள ‘ஆர் இந்தியா பக்சோட் (ஏஐபி)’ என்ற காமெடி குழு நகைச்சுவைக்காக பிரபலங்களின் புகைப்படங்களை மாற்றி பதிவு செய்து சர்ச்சையில் சிக்கி வருகிறது. அவ்வகையில் சமீபத்தில் ஸ்னாட்சாட் மூலம் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை நாயுடன் முகத்துடன் இணைத்து மீம் உருவாக்கி பதிவு செய்துள்ளது.

இது வைரலாகப் பரவ, சிலர் மும்பை போலீசுக்கு தகவல் அளித்தனர். அருவருப்பான இந்த சேட்டையில் ஈடுபட்ட நபர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். இவ்வாறு தொடர்ந்து அதிருப்தி கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டதையடுத்து, தனது மீமை ஏஐபி நீக்கிவிட்டது.

எனினும், ஏஐபி மீது மும்பை காவல்துறையின் சைபர் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.

கடந்த ஆண்டும் இதே அமைப்பு மும்பையில் நடத்திய நிகழ்ச்சியில் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக போலீசில் பல்வேறு புகார்கள் பெறப்பட்டுள்ளன. அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யும்படி கோர்ட் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்கள்

avatar
wpDiscuz