காஷ்மீர் மாநிலத்தில் வீடு இடிந்து விழுந்து மூவர் பலி

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனை அடுத்து நேற்று இரவு பெய்த கனமழையில் டோகா மாவட்டம் காண்டோ பகுதியில் வீடு இடிந்து விழுந்தது. இதில் அவ்வீட்டில் இருந்த குழந்தை உட்பட 3 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.

இது பற்றி போலீசார் கூறுகையில், இவ்விபத்தில் முகமது அப்பாஸ், அவருடைய மனைவி தஸ்லீமா பேகம் மற்றும் அவர்களுடைய குழந்தை அலிசா பானோ ஆகிய மூவரும் பரிதாபமாக பலியாயினர். அவர்களின் உடல் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவித்தனர்.


கருத்துக்கள்

avatar
wpDiscuz