பாகிஸ்தானில் சிறுவனை கழுதையில் கட்டி இழுத்துச் சென்று கொன்ற கொடூரன்

வடகிழக்கு பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் அபோட்டாபாத் என்ற மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டத்தின் லோரா பகுதியில் வசித்து வரும் மொகமது மிஸ்கீன் என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்திற்குள் 8 வயதான முதாஸிரின் கழுதை தவறுதலாக நுழைந்து விட்டது.

இதனால் சிறுவன் மீது மொகமது மிஸ்கீனுக்கு கடும்கோபம் ஏற்பட்டது. உன்னுடைய கழுதை என்னுடைய நிலத்திற்குள் ஏன் நுழைந்தது என்று கூறி, அந்த சிறுவனை கயிற்றால் கழுதையுடன் சேர்த்து கட்டியுள்ளார். பின்னர், அந்த கழுதையை வேகமாக ஓடும்படி அடித்துள்ளார். அந்த கழுதை நிலத்தை சுற்றி வேகமாக ஓடியதால் சிறுவன் தரையில் இழுக்கப்பட்டு படுகாயம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்தான்.

இதுதொடர்பாக சிறுவனின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், மிஸ்கீனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வழி தவறி நிலத்திற்குள் வந்த சிறுவனை கழுதையில் கட்டி இழுக்கவைத்து கொன்ற கொடூரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கருத்துக்கள்

avatar
wpDiscuz