9-வது மாடியில் ஜன்னலின் விளிம்பில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை: என்ன ஆனது?

ஆசிரியர் – Editor II

மூன்று வயது மதிக்கத்தக்க குழந்தை ஒன்பதாவது மாடியின் ஜன்னலின் விளிம்பில் சுமார் 10 நிமிடம் விளையாடிக் கொண்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசிலின் Goiania பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மூன்று வயது மதிக்கத்தக்க குழந்தை வீட்டின் படுக்கையறையில் இருந்து ஜன்னல் வழியாக வெளியே வந்துள்ளது.

வெளியே வந்த குழந்தை அந்த ஜன்னலை முன்னும், பின்னும் தள்ளி சுமார் 10 நிமிடம் வரை விளையாடிக் கொண்டிருந்தது. இதைக் கண்ட அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

இதை அறிந்த குழந்தையின் தாய், பால்கனி வழியாக வந்து குழந்தையை பத்திரமாக மீட்டார். இது தொடர்பான காட்சியை அங்கிருந்தவர்கள் படமெடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

இது குறித்து தீயணைப்பு அதிகாரி கூறுகையில், பெற்றோர் தங்கள் குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும், ஜன்னலில் தடுப்பு கம்பிகள் போடாமல், இருந்தால் இது போன்ற நிகழ்வு நடக்கத் தான் செய்யும், குழந்தைகளுக்கு என்ன தெரியும், கண்டிப்பாக ஜன்னலுக்கு இடையில் கம்பி போல் வேலி போடுங்கள் என்று கூறியுள்ளார்.

கடந்த 2009-ஆம் ஆண்டு Rio de Janeiro -வில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் ஆறு மாத குழந்தை 7-வது மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்தது குறிப்பிடத்தக்கது.

Loading...