‘LGBT’ ஓரின இயக்கம்: நிஷாவுக்கு அமெரிக்க தூதரகம் ஆதரவு!

Please log in or register to like posts.
News

கோலாலம்பூர், ஆக.10- எல்.ஜி.பி.டி. (LGBT) எனப்படும் ஓரின இணைவு தொடர்பான செயல்பாட்டாளர்களான நிஷா அயூப் மற்றும் பாங் கீ தெய்க் ஆகியோரின் புகைப்படங்களை ஜோர்ஜ் டவூன் விழா கண்காட்சியிலிருந்து அகற்றப் பட்ட வேளையில், அவ்விருவருக்கும் அமெரிக்க தூதரகம் ஆதரவு தெரிவித்துள்ளது.

“புகைப்படங்கள் ஆயிரம் வார்த்தைகளை வெளிப்படுத்தலாம். ஆனால், வார்த்தைகளை விட நடவடிக்கைகளுக்கு தாக்கம் அதிகம் உள்ளது என்று அது கூறியது

“சகிப்புத் தன்மை மற்றும் பாகுபாடின்றி அனைவரையும் ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும், 2016-ஆம் ஆண்டின் அனைத்துலக துணிகர பெண்கள் விருதின் வெற்றியாளரான நிஷா மற்றும் பாங் கீ தெய்க்கின் செயலுக்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கின்றோம்” என்று அமெரிக்க தூதரகம் தனது முகநூல் பக்கத்தில் கூறியுள்ளது.

திருநங்கையான நிஷா அயூப், அமெரிக்க வெளியுறவுத்துறையின் அனைத்துலக துணிகர பெண்கள் விருதினை வென்ற முதல் திருநங்கை நிஷா எனப்து குறிப்பிடத்தக்கது.

பினாங்கு மாநிலத்தில் நடைபெற்ற கலை மற்றும் பண்பாடு விழாவில் வைக்கப் பட்டிருந்த நிஷா மற்றும் பாங் கீயின் புகைப்படங்கள், அமைச்சரின் நெருக்குதல் காரணமாக அந்தக் கண்காட்சியிலிருந்து அகற்றப் பட்டன என்று அண்மையில் செய்திகள் வெளியிடப் பட்டன.

பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் கொள்கைக்கு மாறாக ஓரின தொடர்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் அவ்விருவரின் புகைப்படங்களை அகற்றுமாறும் தாம் உத்தரவிட்டதாக பிரதமர் துறையின் இஸ்லாமிய விவகார அமைச்சர் டத்தோ முஜாஹிட் யூசோப் ரவா தெரிவித்தார்.

ஓரின இணைவை மலேசியர்கள் ஆதரவிக்கவில்லை என்பதை உணர்ந்து அதனை ஆதரிக்கும் சமூக ஆர்வலர்கள் செயல்பட வேண்டும் என்று பிரதமர் துறை துணை அமைச்சர் புஸீயா சால்லே அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *