PTPTN கடன்: சம்பளத்தில் ‘வெட்ட’ சட்டத்தில் இடமுண்டு- வான் சைபுல்

Please log in or register to like posts.
News

கோலாலம்பூர்,டிச.06- PTPTN கடனைப் பெற்றிருந்தோரின் சம்பளத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் ஒரு சிறு தொகையை பிடித்தம் செய்வதற்கு முதலாளிமார்களுக்கு உரிமை உண்டு என்று PTPTN கல்வி நிதிக் கழகத்தின் தலைவர் வான் சைபுல் வான் ஜான் தெரிவித்தார்.

1997-ஆம் ஆண்டு PTPTN சட்டத்தின் செக்‌ஷன் 29-இன் கீழ் இது குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இந்தச் சட்டவிதியின்படி, PTPTN கழகம் கடன் பெற்றோரின் சம்பளத்திலிருந்து பணத்தை பிடித்தம் செய்யுமாறு முதலாளிமார்களுக்கு உத்தரவிடலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

“உயர்கல்வி கடனைப் பெற்றவர்கள் தங்களின் கடனை அடைக்க வேண்டும் என்பதற்காகவே இப்படியொரு திட்டத்தைக் கொண்டு வந்தோம். இவர்கள் கடனை அடைக்கும்போது தான் புதியவர்களுக்கு கடனுதவி கொடுக்க முடியும்.

“ஆனால், சிரமம் இருப்பின் யார் வேண்டுமானாலும் எங்களிடம் முறையிடலாம். உண்மையிலேயே சிரமம் இருந்தால் நாங்கள் பரிசீலிப்போம்” என்றார் அவர்.

சம்பளத்திலிருந்து PTPTN பணத்தை பிடித்தம் செய்து கொள்வது PTPTN சட்டத்தில் இல்லை என்று மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் கூறி இருப்பதை அடுத்து வான் சைபுல் இவ்வாறு விளக்கமளித்தார்.

The post PTPTN கடன்: சம்பளத்தில் ‘வெட்ட’ சட்டத்தில் இடமுண்டு- வான் சைபுல் appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *