(VIDEO) – அன்பு காட்டும் ஆமைகளை துன்புறுத்துவதா?

அசுக்வேரி, ஜூலை 12 – இந்தோனேசியாவில் ஆமை மீது ஏராளமானோர் சவாரி செய்யும் வீடியோ பதிவு சமீபத்தில் வைரலாகியது.

இந்தோனேசியர்கள் சிலர், தண்ணீருக்குத் அடியெடுத்து வைத்து திரும்பிச் செல்ல முயன்ற ​​ஆமை மீது உட்கார்ந்து சவாரி செய்தது மட்டுமின்றி, துன்புறுத்துவதையும் வீடியோ மூலம் காண முடிகிறது.

இச்சம்பவம் ஜூலை 5 ஆம் தேதி இந்தோனேசியாவின் அசுக்வேரி கடற்கரையில் நடந்ததாக ‘லாட்பிபிள்’ ஊடகம் தெரிவித்துள்ளது.

வீடியோவின் ஆரம்பத்தில், ஒரு முதியவர் ஆமையின் மீது அமர்ந்து கொண்டு போஸ் குடுப்பது பதிவாகியது. இத்தகைய செயலால், வீடியோ முழுவதிலும் ஆமை தொடர்ந்து வலம் வர போராடியது தெரிந்தது.

வீடியோவின் ஒரு கட்டத்தில், அங்கிருந்த ஒருவன் தனது கால்களை ஆமையின் தலையில் வைப்பதும் கடைசியில், ஆமை கடலுக்கு அருகில் சென்றபோது, ​​ மஞ்சள் நிற காற்சட்டை அணிந்த மற்றோருவன் அதன் கால்கள் மீது நின்று மிதிப்பது போன்ற மனசாட்சியற்ற செயல்கள் நெட்டிசன்கள் மத்தியில் அதிருப்தி எழுபியது.

‘ஏஓஎல்’ ஊடகம் படி, இந்தோனேசியா கடல் ஆமைகளுக்குப் பாதுகாப்பு அமைத்து, அவைகளைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று உள்ளூர் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும், இச்சம்பவம் குறித்து உள்ளூர் அதிகாரிகள் இன்னும் அறிக்கை வெளியிடவில்லை.

The post (VIDEO) – அன்பு காட்டும் ஆமைகளை துன்புறுத்துவதா? appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *