VIDEO – சாலையில் தந்திரமாக நடித்த பெண்- கண்காணிப்பு காமிராவில் அம்பலம்

சீனா, ஜூலை.12 –  சாலையில் பெண்ணின் துணிச்சலான நடிப்பு மிக அபாரம். சாலையில் சென்று கொண்டிருந்த லோரியின் முன் ஓடிச் சென்று படுத்துக் கொண்டு, லோரி அவரை இடித்து கீழே விழுந்தாற் போல் செய்த நடிப்பு தந்திரம் பலரையும் வியக்க வைத்துள்ளது.

கடந்த ஜூலை 4 ஆம் தேதி நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று தற்போது வலைத்தளங்களின் பரவி வருகின்றது.

தாங் என்ற அப்பெண்மணி, சாலை விபத்து என்ற பெயரில் சம்பந்தப்பட்ட லோரி ஓட்டுனரிடமிருந்து  நஷ்டயீடு பெறுவதற்காக அவர் அவ்வாறு நடித்தார் என்று உள்ளூர் ஊடகம் வெளியிட்ட செய்தியின் வழி தெரியவந்துள்ளது.

Chinese scam attempt caught on camera

This woman in China claimed she was seriously injured by this truck. Then police saw this footage.

Posted by South China Morning Post on Tuesday, 9 July 2019

video source : South China Morning Post

அக்காணொளியில், சாலையில் அந்த லோரி மெதுவாக வந்து கொண்டிருந்தது. அப்போது, மிதிவண்டியில் வந்து கொண்டிருந்த அப்பெண்,  திடீரென்று மிதிவண்டியை பக்கவாட்டில் வைத்த படி ஓடி வந்து,  அந்த லோரியின் முன் சக்கரத்தில் விழுவது போல் நடித்து, படுத்துக் கொண்டார். அச்செயல் நடிப்பு என்பதால்  பொதுமக்கள் வேடிக்கை  பார்த்த வண்ணம் நிகழ்வதை பார்த்துக் கொண்டிருந்தனர்.

மேலும், சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு போலீஸ் படை வந்த பிறகு, வேதனையில் புலம்புவதைப்  போலும் தாங் நடித்துள்ளார். அதன் பிறகு, போலீஸ் படையினர் அச்சாலையில் பொருத்தபட்டுள்ள கண்காணிப்பு காமிராவின் மூலம் பார்ந்த போது, இச்சாலை விபத்து ஒரு நாடகம் என்று அறிந்தனர். இது தொடர்பாக தாங்கிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தெரிய வந்துள்ளது.

இக்காணொளியைக் கண்ட வலைத்தளவாசிகள் பலர் தாங்கின் அபார நடிப்பைப் பார்த்து பாராட்டியும் கேலியும் செய்துள்ளனர். அதிலும், ஒருவர் அவரின் நடிப்பிற்கு ‘ஆஸ்கார்’ விருது கொடுக்கலாம் என்று பதிவிட்டுள்ளார்.

The post VIDEO – சாலையில் தந்திரமாக நடித்த பெண்- கண்காணிப்பு காமிராவில் அம்பலம் appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *