VIDEO – தக்க சமயத்தில் தீ விபத்திலிருந்து பெண்ணைக் காப்பற்றிய ஹீரோ!

தஞ்சோங் பூங்கா, ஜூலை.18 – பெரும்பாலும் சினிமாவில் தான் ஹீரோவைப் பார்த்திருப்போம். ஆனால், நிஜ வாழ்க்கையிலும் சில ஹீரோக்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

அந்த வகையில், அண்மையில் ஜோர்ஜ் டவுன், தஞ்சோங் பூங்கா  எனும் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள இரு வீடுகள் தீப்பற்றிக் கொண்டது. அந்த சமயத்தில், அந்த இரு வீடுகளில் ஒரு வீட்டில் முடக்குவாதம் ஏற்பட்ட பெண் ஒருவர் இருப்பதை அறிந்த ஆடவர்  உடனடியாக அவரை காப்பாற்றினார்.

Video Source : Jabatan Bomba dan Penyelamat Malaysia Negeri Pulau Pinang

தீ ஏற்படும் சமயத்தில் சம்பந்தப்பட்ட  வீட்டில், அந்தப் பெண்ணைத் தவிர வேறு யாரும் இல்லை என தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தெரிவித்தனர்.

சுமார் காலை 11.53 மணியளவில், தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர், அந்தப் பெண்ணைக் காப்பாற்றி  தீயை அணைத்தனர்.

மேலும், தக்க சமயத்தில் அந்தப் பெண்மணியைக் காப்பாற்றியதற்கு தீயணைப்பு துறை அவருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.

The post VIDEO – தக்க சமயத்தில் தீ விபத்திலிருந்து பெண்ணைக் காப்பற்றிய ஹீரோ! appeared first on Vanakkam Malaysia.