(VIDEO) மாதுவின் சங்கிலி பறிப்பு – கொள்ளையர்களுக்கு வலைவீச்சு

செம்மிஞே, ஜூலை 18, இங்குள்ள சந்தையில் நடந்த வழிப்பறியின்போது மாதுவின் சங்கிலியைத் திருடிச் சென்ற இரு வழிப்பறிக் கொள்ளையர்களைப் போலீசார் தேடிவருகின்றனர்.

நேற்று காலை 10.59 மணியளவில் பாதிக்கப்பட்ட அந்த மாது சந்தையின் முன் கதவிற்குச் சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இரு ஆடவர்கள்  அந்த மாதுவை நெருங்கி அவரின் கழுத்திலுள்ள சங்கிலிந்த் திருடிச் செல்வது  கண்காணிப்புக் காமிராவில் பதிவாகியுள்ளது என காஜாங் காவல் துறைத் தலைவர் அமாட் தசாஃபிர் முகமட் யூசோஃப் தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட அந்த மாது கொடுத்த போலீஸ் புகாரின் அடிப்படையில்,  சம்பந்தப்பட்ட அந்த இரு வழிப்பறிக் கொள்ளையர்களையும் காவல் துறையினர் தேடிவருவதாக அமாட் தசாஃபிர் செய்தியாளரிடம் கூறினார்.

Posted by Info Roadblock JPJ/POLIS on Wednesday, 17 July 2019

இச்சம்பவம் குறித்து குற்றவியல் சட்டம்,  பிரிவு 395 இன் கீழ் விசாரணை நடத்தப்படும் என அமாட் தசாஃபிர் தெரிவித்தார்.

The post (VIDEO) மாதுவின் சங்கிலி பறிப்பு – கொள்ளையர்களுக்கு வலைவீச்சு appeared first on Vanakkam Malaysia.