ஆசிரியை கொலை செய்த வழக்கில்., கொலையாளிகள் பகீர் வாக்குமூலம்.!

  • 1 month ago
  • 0 0

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சந்தவாசல் அருகேயுள்ள முனியந்தாங்கல் கிராமத்தை சார்ந்தவர் லூர்துமேரி (வயது 65). இவர் ஓய்வு பெற்ற ஆசிரியை ஆவார். இவருக்கு திருமணம் முடியாத நிலையில்., அங்குள்ள முனியன்தாங்கல் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் இருக்கும் சொந்த இல்லத்தில் தனியாக வசித்து வந்துள்ளார்.

இவரின் வீட்டிற்கு இருபுறமும் கடைகள் அமைத்துள்ள நிலையில்., இவர் கடந்த 5 ஆம் தேதியன்று தலை மற்றும் உடலில் பலத்த வெட்டுக்காயத்துடன் கொலை செய்யப்பட்டு இருந்துள்ளார். இவரது வீட்டின் முன்புறத்தில் இருந்த நாயும் கொலை செய்யப்பட்டு இருந்துள்ளது. மேலும்., வீட்டில் இருந்த நகை மற்றும் பணம் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்துள்ளது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில்., ஆசிரியையை கொலை செய்ய வந்த நபர்கள் நன்கு அறிந்தவர்களாக இருக்க வேண்டும் என்று சந்தேகித்தனர்.

மேலும்., ஆசிரியை அன்பாக வளர்த்து வந்த நாயும் கொலை செய்யப்பட்டதால் சந்தேகமடைந்த நிலையில்., ஆசிரியையின் அருகில் இருக்கும் இரண்டு கடைகளின் உரிமையாளர் வெளியூர் மற்றும் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில்., வாடகைக்கு கடை வைத்திருந்த நபர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

காவல் துறையினரின் விசாரணையில் இறைச்சிக்கடை நடத்தி வந்த கேளூர் பகுதியை சார்ந்த இலியாஸ் (வயது 30) என்பவரின் மீது சந்தேகம் ஏற்படவே., காவல் துறையினர் மேற்கொண்ட தீவிர விசாரணையில் பகீர் தகவலானது வெளிவந்துள்ளது. இலியாஸிடம் மேற்கொண்ட விசாரணையில்., வாலாஜா பகுதியை சார்ந்த யூசப் (வயது 34)., மூஸா (வயது 40)., இராணிப்பேட்டை பகுதியை சார்ந்த விஜய்குமார் (வயது 35) ஆகியோருடன் இந்த சம்பவம் அரங்கேறியது தெரியவந்துள்ளது.

இதுமட்டுமல்லாது லூர்து மேரியின் இல்லத்திற்கு அருகில் உள்ள காம்ப்ளக்சில் கறிக்கடை வைத்துள்ள எனக்கு அருகில் இருக்கும் கடையில் இருந்து அதிக வருமானம் வருவது தெரியும். அவரிடம் அதிகளவு நகைகள் இருக்கும். மேலும்., புதிது புதிதாகவும் நகைகளை எப்போதும் போட்டுக்கொண்டே இருப்பார்.

அவரை கொலை செய்து நகைகளை திட்டமிட்ட நான் எனது கூட்டாளிகளிடம் தகவலை தெரிவித்து சம்பவத்தன்று இரவு 8.30 மணிக்கு நால்வரும் ஆசிரியையின் இல்லத்திற்கு சென்று இருந்த நேரத்தில்., எங்களை பார்த்த ஆசிரியை கேள்வி கேட்கவே., நான் நாய்க்கு இறைச்சி கொடுப்பதாக கூறியதை அடுத்து., என்னுடன் வந்தவர்கள் ஆசிரியை பேசிக்கொண்டு இருக்கும் போதே தலையில் ஓங்கி அடித்தனர்.

இதனால் அவர் நிலைகுலைந்து விழவே., உடலை வீட்டிற்குள் கொண்டு சென்று., எங்களை பார்த்து குரைத்துக்கொண்டு இருந்த நாயால் எங்களுக்கு எப்போதும் ஆபத்து வரும் என்று எண்ணி அதனையும் கொலை செய்து., அவரது பீரோவில் உள்ள நகைகளை கொள்ளையடித்தோம். பின்னர் சிலிண்டர் விபத்தில் பலியானது போல சேலைக்கு தீவைத்துவிட்டு நாங்கள் வந்த நிலையில்., தீ எதிர்பாராத விதமாக அணைந்ததால் சிலிண்டர் வெடிக்கவில்லை.

காவல் துறையினரின் விசாரணையில் தற்போது நாங்கள் மாட்டிக்கொண்டோம் என்று தெரிவித்தததை அடுத்து., இவர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளார். இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பெரும் பயத்துடன் இருக்கும் நிலையில்., வெளி ஆட்கள் யாரும் வீட்டிற்கு வந்தால் வீட்டின் வாயிலில் கூட அனுமதிக்க வேண்டாம் என்று காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *