ஆர்சர் பவுன்சரில் அடிபட்ட ஸ்மித் லார்ட்ஸ் டெஸ்டில் இருந்து விலகல்: மாற்று வீரர் சேர்ப்பு

  • 6 months ago
  • 0 0

லண்டன் லார்ட்ஸ் டெஸ்டில் ஆர்சர் வீசிய பந்து ஸ்மித்தின் கழுத்து பகுதியை பலமாக தாக்கியதால் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

நேற்று ஆஸ்திரேலியாவின் ஸ்மித் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஆர்சர் வீசிய பவுன்சர் பந்து ஸ்மித்தின் இடது பக்க கழுத்தில் பலமாக தாக்கியது. இதனால் நிலைகுலைந்த அவர், அப்படியே கீழே விழுந்தார்.

பின்னர் டாக்டர் உதவியுடன் வெளியேறினார். என்றாலும் வலியை சமாளித்துக் கொண்டு மீண்டும் பேட்டிங் செய்ய வந்தார். ஆனார், அவர் அந்த அதிர்ச்சியில் இருந்த மீளவில்லை என்று ஆஸ்திரேலிய அணியின் டாக்டர் கூறினார். போட்டிக்கான டாக்டரும் இதையே வலியுறுத்தியதால் லார்ட்ஸ் டெஸ்டில் இருந்து விலகியுள்ளார்.

தற்போதுள்ள விதிப்படி ஒரு வீரர் மூளையளர்ச்சியால் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் மாற்று வீரர் களம் இறங்கலாம் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஸ்மித்திற்குப் பதிலாக மாற்று வீரராக மார்னஸ் லபுஸ்சேக்னே களம் இறங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *