இடமாற்றத்தை அடுத்து வேதநாயகன் ஓய்வு!

  • 4 days ago
  • 0 0

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றி இடமாற்றம் அறிவிக்கப்பட்டதன் காரணமாக தனது ஓய்வை அறிவித்து அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனின் பிரிவுபசார நிகழ்வு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

யாழ்ப்பாண மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இன்று (14) இடம்பெற்றது.

யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தம்பதியினர் கலந்து கொண்டார்கள்.

இந்த நிகழ்வில் 2015ம் ஆண்டு முதல் இன்று வரை யாழ்ப்பாண மாவட்டத்தின் அரசாங்க அதிபராக கடமையாற்றிய யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனுக்கு கௌரவிப்பு நிகழ்வும் வாழ்த்துரைகளும் இடம்பெற்றது

இதில் யாழ்.மாவட்டத்தை சேர்ந்த பிரதேச செயலாளர்கள், யாழ்.மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் திணைக்கள தலைவர்கள் கலந்து கொண்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *