இணையத்தின் தீமைகள் அனைத்தையும் களைய முடியாது! – பேஸ் புக் நிறுவனர்

  • 11 months ago
  • 2 0

வாஷிங்டன், ஏப்.1- இணையதளங்கள் தொடர்பான சட்ட திட்டங்களை புதுப்பிப்பதன் மூலம் அவற்றை சிறப்பாக பாதுகாக்க முடியும். ஆனால் அதன் தீமைகள அனைத்தையும் களைந்து விடமுடியாது என்று   உலகெங்கும் பிரபல சமூக வலைத்தளமான பேஸ் புக்கின்  நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான மார்க் ஷக்கர் பெர்க்  கூறினார்.

அமெரிக்காவில் இருந்து வெளிவரும் “தி வாஷிங்டன் போஸ்ட்” பத்திரிகையில் ஒரு கட்டுரை ஒன்றை அவர் எழுதியுள்ளார். அதில் அவர் இணைய தள நிறுவனங்கள் மீது அரசுகள் மற்றும் விதிமுறை கட்டுப்பாட்டாளர்களராகிய தரப்பு இன்னும் அதிக பங்களிப்பு செய்ய வேண்டியுள்ளது.

இணையதளங்கள் தொடர்பான சட்ட திட்டங்களை புதுப்பித்துக் கொண்டே இருக்கவேண்டும்.  அதன் மூலம் அவற்றை சிறப்பாக பாதுகாக்க முடியும். தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தவும் பொது மக்களுக்கு புதிய விஷயங்களை உருவாக்கவும் தொழில் அதிபர்களுக்கு சுதந்திரம் வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தீங்கான உள்ளடக்கம், தேர்தல் நேர்மை, தனியுரிமை தகவல்களை எடுத்துச் செல்லுதல் ஆகிய 4 அம்சங்களிலும் புதிய ஒழுங்கு முறை வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இணைய தளங்களில் இருந்து தீங்கான உள்ளடக்கம் அனைத்தையும் அகற்றுவது  என்பது சாத்தியம் இல்லை என எழுதியுள்ளார்.

The post இணையத்தின் தீமைகள் அனைத்தையும் களைய முடியாது! – பேஸ் புக் நிறுவனர் appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *