இந்தியா செல்ல முயன்ற எட்டுப் பேர் கைது

  • 1 month ago
  • 0 0

சட்டவிரோதமாக இந்தியாவிற்கு செல்ல முயன்ற கிளிநொச்சி, மற்றும் மன்னாரை சேர்ந்த எட்டுப்பேர் நேற்று (11) தலைமன்னார் வெலிபர பகுதியில் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, வட மத்திய கடற்படை கட்டளை நடத்திய ரோந்து நடவடிக்கையின் போது இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு சட்டவிரோதமாக குடியேற முயன்ற 8 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாரு கைது செய்யப்பட்டவர்களில் ஐந்து ஆண்கள், ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளனர். குறித்த நபர்களை மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

பொலிஸார் மூலமாக இவர்களை இன்று மன்னார் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டபோது சட்டத்தரணிகள் ஆக டெனிஸ்வரன் மற்றும் தினேஷ் ஆகியோர் ஆஜராகி இருந்தனர், நீதிபதி இல்லாத காரணத்தினால் உதவி நீதிபதி சந்தேக நபர்களை நபர்களை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறும் சிறுவர்களை மன்னார் அன்னை இல்லத்தில் ஒப்படைக்கும் படி ஆணையிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *