எந்த இடத்திலும் களம் இறங்க தயார் என்கிறார் ஹனுமா விஹாரி

  • 4 days ago
  • 0 0


நியூசிலாந்து லெவன் அணிக்கெதிராக சதம் விளாசிய ஹனுமா விஹாரி, அணியின் நலனுக்கான எந்த இடத்திலும் களம் இறங்க தயார் என்று தெரிவித்துள்ளார்.

இந்திய டெஸ்ட் அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக களம் இறங்கி விளையாடி வருபவர் ஹனுமா விஹாரி. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் மேல்போர்னில் தொடக்க வீரராக களம் இறங்கினார். அப்பேர்த ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை எளிதாக எதிர்கொண்டார்.

பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் ரன்கள் அடிக்காவிடிலும் சுமார் 15 ஓவர்களுக்கு மேல் தாக்குப்பிடித்தார். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறங்கி சதம் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

ஆனால் இந்தியாவில் நடைபெற்ற நான்கு போட்டிகளிலும் ஒன்றில் மட்டுமே களம் இறங்கினார். இந்தியா ஐந்து பந்து வீச்சாளர்களுடன் விளையாடினால் ஹனுமா விஹாரிக்கு இடம் கிடைப்பது கடினம்.

இந்நிலையில் நியூசிலாந்து லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் புஜாராவைத் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் திணற 6-வது வீரராக களம் இறங்கிய ஹனுமா விஹாரி சிறப்பாக விளையாடி சதம் அடித்தார்.

இந்நிலையில் அணியின் நலனுக்காக எந்த இடத்திலும் களம் இறங்கி விளையாடத் தயார் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஹனுமா விஹாரி கூறுகையில் ‘‘ஒரு வீரரான எந்த இடத்திலும் களம் இறங்கி பேட்டிங் செய்ய என்னை தயார்படுத்தியுள்ளேன். தற்போது நான் எதைப் பற்றியும் கூற இயலாது. நாம் முன்னதாகவே சொன்னதுபோல், அணி என்னை எந்த இடத்தில் இறங்கி பேட்டிங் செய்ய சொல்கிறதோ, அந்த இடத்தில் களம் இறங்கி பேட்டிங் செய்ய தயாராக இருக்கிறேன்.

சில நேரங்களில் விளையாட இடம் கிடைக்காத நேரத்தில் அணியின் காம்பினேசனை புரிந்து கொள்ள வேண்டும். அதனால் மனதை தளரவிட முடியாது. இந்திய மண்ணில் இந்தியா விளையாடும்போது ஐந்து பந்து வீச்சாளர்களுடன் விளையாடும் என்பதை நான் புரிந்து கொண்டுள்ளேன். அதனால் ஒரு சிறந்த வீரர் வெளியில் இருக்க வேண்டும். நான் யாருக்காகவும் எதையும் நிரூபிக்க வேண்டிய தேவையில்லை. ஆனால், நடைமுறையை பின்பற்ற வேண்டியுள்ளது’’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *