காதல் திருமணம் செய்த பெண்ணை கடத்தி சென்ற கும்பல்.!

  • 8 months ago
  • 0 0

கரூர் மாவட்டத்தில் உள்ள தோகைமலை அருகேயுள்ள கருங்கல்பட்டி பகுதியை சார்ந்தவர் சேகர். இவரது மகனின் எம்பயர் மணிவாசன் (வயது 22). இதனைப்போன்று அங்குள்ள கடவூர் அருகேயுள்ள செம்பியானத்தம் பகுதியை சார்ந்தவர் வெள்ளைக்கண்ணு. இவரது மகளின் பெயர் ரம்யா (வயது 20).

இவர்கள் இருவரும் அங்குள்ள தனியார் ஜவுளி நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில்., இவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு ரீதியிலான பழக்கம் காதலாக மாறியுள்ளது. இந்த காதல் விவகாரம் ரம்யாவின் பெற்றோருக்கு தெரியவரவே., ரம்யாவிற்கு திருமணம் ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த தகவலை அறிந்த ரம்யா வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்து., வீட்டை விட்டு வெளியேறிய நிலையில்., இருவரும் அங்குல கோவில் பகுதியில் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில்., பாதுகாப்பிற்க்காக காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

இந்த நேரத்தில்., காவல் துறையினர் இருதரப்பு பெற்றோருக்கும் தகவல் தெரிவித்ததை அடுத்து., தகவலை அறிந்த பெற்றோர்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கு சென்ற நிலையில்., ரம்யா காதலருடன் செல்ல விரும்பும் தெரிவித்துள்ளார்.

இந்த சமயத்தில்., காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து., ரம்யா தனது காதலர் வீட்டாருடன் காரில் சென்று கொண்டு இருந்தார். அந்த சமயத்தில்., இவர்களை இடைமறித்த காரில் வந்த நபர்கள்., மணிவாசனின் குடும்பத்தினர் மற்றும் மணிவாசனை தாக்கி., ரம்யாவை கடத்தி சென்றனர். இந்த விஷயம் குறித்து தகவலறிந்த காவல் துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *